close
முகப்புபங்குசந்தையில் இன்று சரிவை கண்டது இந்திய சந்தை

பங்குசந்தையில் இன்று சரிவை கண்டது இந்திய சந்தை

பங்குசந்தையில் இன்று சரிவை கண்டது இந்திய சந்தை

தொடக்கத்தில் உயர்வை கண்டாலும் , இன்றைய  பங்குசந்தை முடிவில் இந்திய சந்தை சரிவை கண்டது. சீனா , அமெரிக்கா இடையேயான வர்த்தக மாற்றங்களினால் உலகப் பங்குசந்தையும் சரிவை கண்டது. 

சென்செக்ஸ் 351 புள்ளிகள் குறைந்து 33,019 ஆகவும், நிஃப்டி 116 புள்ளிகள் குறைந்ந்து 10,128 ஆகவும் முடிவடைந்தது. முன்னதாக, காலை நேர நிலவரப்படி சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து 33,505 ஆகவும், நிஃப்ட்ய் 10,279 ஆகவும் இருந்தது.

ஐடி, உலோகம் , எண்னை மற்றும் எரிவாயு, வங்கிகள் ஆகிய துறைகளே இன்றைய சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. உலோகத்துறை 2 முதல் 7 சதவிகதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. வங்கிகள் 1.7% சரிவு கண்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எண்ணை துறையிலும், வேதாந்தா, ஹிண்டால்கோ , டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் இன்றைய பங்கு சந்தையில் அதிக இழப்பை சந்தித்தவர்கள்.

அதேபோல், டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக ஆதாயம் பெற்ற நிறுவனங்களாக உள்ளது.