close
முகப்புகும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் திடீர் தீவிபத்து

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் திடீர் தீவிபத்து

February 13, 2018 394Views
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் திடீர் தீவிபத்து

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 

கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் நாட்டியாஞ்சலியை பார்த்துக் கொண்டும், தரிசனம் செய்வதற்காகவும் ஆலயத்திற்குள் இருந்தனர். ஒரு பக்கம் பக்தர்களுக்காக தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இலவசமாக பால் வழங்கி கொண்டிருந்தது. இதற்காக பாலை காய்ச்சுவதற்காக அருகிலேயே சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்து பயன்படுத்தினர். அப்போது திடீரென சிலிண்டரின் டியூப் கழன்று கேஸ் கசிந்து தீப்பிடித்தது. இதனைக் கண்ட பக்தர்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக ஆலய ஊழியர்களும் பக்தர்களும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் சிலிண்டரை ஆலயத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்றாலும், இந்த தீ விபத்து பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.