லண்டன் தேம்ஸ் நதிக்கு அருகே 2ஆம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து லண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
லண்டன் விமான நிலையம் அருகே உள்ள தேம்ஸ் நதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் வி டோக்கில் (George V Dock), கிழக்கு லண்டன் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த பணி நடைபெற்று கொண்டிருந்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது என்று லண்டன் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குண்டு இரவு கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை அகற்ற கடற்படையினரோடு இணைந்து போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு வெடிப்பு தன்மை இருப்பதாகவும், அதனை செயலிக்க செய்யும் செயலில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுப்பட்டனர். எனவே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனால், லண்டன் விமான நிலையத்தில் 130 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில் வெடிக்குண்டை கடற்படையினரும், போலீசாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பதற்றமான சூழ்நிலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் லண்டன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.