close
முகப்புமுத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்: 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து  வெற்றி 

முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்: 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து  வெற்றி 

February 13, 2018 212Views
முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்: 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து  வெற்றி 

முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் எடுத்தது. 

கேப்டன் வில்லியம்சன், மார்டின் கப்தில் அரைசதமடித்தனர். 197 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் மட்டும் அரைசதம் கடந்தார். 

மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.