close
முகப்புநிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி அதிரடி உத்தரவு

நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி அதிரடி உத்தரவு

நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! டிஜிபி அதிரடி உத்தரவு

மாணவிகளை தவறாக வழிநடத்திய உதவி பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கு விசாரணை சிபிஐசிடிக்கு மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நிர்மலா தேவி கணிதத்துறையில் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். 

அவர் தான் பணிபுரியும்  கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை  தொலைபேசியில் அழைத்து  உயர் அதிகாரிகள் சிலருடன் படுக்கையை பகிருமாறு பேசிய உரையாடல் சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தெடார்ந்து நிர்மலா தேவியை கைது செய்த போலீசார் அவரை தொடர்ந்து 2 நாட்களாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நிர்மலா தேவி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.