close
முகப்புசிரியாவில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி

சிரியாவில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி

சிரியாவில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிரிய உள்நாட்டுப் போரில் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு கூட்டா பகுதியும் அண்மையில் கைப்பற்றப்பட்டது. இது, சிரிய அதிபர் ஆசாத்திற்கு  கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. 

முன்னதாக, கிழக்கு கூட்டாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் நுழைந்து செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. சிரிய அரசப்படையின் இந்த தடையால் உள்நாட்டுப் போரின் உண்மைத்தன்மை வெளிவராமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில், கிழக்கு கூட்டாவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், இதனால் இப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் நுழையலாம் என்றும், உள்ளூர் மக்களிடமிருந்து அவர்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் சிரிய அரசப்படை அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் ஊடகங்கள் முதல், சர்வதேச செய்தி சேவை நிறுவனங்கள் வரை அனைத்து விதமான செய்தி சேகரிப்பாளர்களும் கிழக்கு கூட்டாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இங்குள்ள டௌமா பகுதியில் இரசாயண தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் இத்தாக்குதல் குறித்த தகவல்களைப் பெறுவதில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.