close
முகப்புகத்துவா விவகாரம்: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

கத்துவா விவகாரம்: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

கத்துவா விவகாரம்:  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

காஷ்மீர் சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யபட்டதை கண்டித்து தாராபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிபாவை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி பாதிக்கப்பட்ட சிறுமி ஆஷபாவிற்கு நீதி கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டகாரர்கள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உருவம்பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.