close
முகப்பு"தமிழ் ஒருபோதும் அழியாது" வைரமுத்து புகழாரம் 

"தமிழ் ஒருபோதும் அழியாது" வைரமுத்து புகழாரம் 

"தமிழ் ஒருபோதும் அழியாது" வைரமுத்து புகழாரம் 

அழிக்கவரும் சக்திகளை அழித்துவிட்டு போவதுதான் தமிழே தவிர, தமிழ் ஒருபோதும் அழியாது என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற  தமிழாற்றுப்படை மறைமலை அடிகளாரின் அரங்கேற்ற விழாவில் பேசிய அவர், தமிழ் என்ற தடயத்தை சில சக்திகள் தமிழகத்தில் இருந்து அழிக்க நினைப்பதாக தெரிவித்தார்.

மேலும், தமிழ் மொழி என்பது தமிழர்களின் அதிகாரம் என்றும், தமிழ் மொழி அதிகார மையங்களில் இருந்து ஆளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மறைமலை அடிகளால் தான்  வேற்றுமொழிச் சொற்கள் நீங்கி, தமிழ் செழுமைப் பெற்றதாகவும், சுட்டிக்காட்டினார். 

மேலும், அறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டியதும் மறைமலை அடிகளால் நேர்ந்தவை ஆகும் எனவும் தெரிவித்தார்.