close
முகப்பு750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்... தஞ்சையில் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு...

750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்... தஞ்சையில் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு...

February 14, 2018 350Views
750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்... தஞ்சையில் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு...

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளை 300க்கும் மேற்ப்பட்ட மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.  

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில்  மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை தலைமையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் கொடியசைத்து ஜல்லிகட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகோட்டை, மதுரை, கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட 750 காளைகளை,  300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதில், வெற்றி பெற்ற மாடுபுடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், கைபேசிகள் பரிசுகளாக அளிக்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகள் வழங்கப்பட்டன.