close
முகப்புஜம்மு காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு !

ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு !

ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு !

ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியன் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடைபெற்றது. காவல்நிலையத்தை குறிவைத்து நடத்திய தீவிரவாதிகள் தப்பி சென்றதாக தெரிகிறது. 

இந்த துப்பாக்கிக் சூட்டில் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பிற சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.