close
முகப்புசுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 

சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 

சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 

நோய்வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ராஜேஸ்வரி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானையின் ஒரு காலில் காயம் ஏற்பட்டு, நிற்க முடியாமல் கீழே விழுந்தது. தற்போது படுத்த படுக்கையாக இருக்கும் யானை, உடலிலும் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது.

 பல விதமான சிகிச்சைகளை கால்நடை மருத்துவர்கள் வழங்கியும், எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த யானையை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும் சென்னை கோட்டூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

 இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யானையின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, சேலம் கால்நடை மருத்துவர் 48 மணி நேரத்துக்குள் யானையை பரிசோதனை செய்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் உத்தரவிடப்பட்டது. 

அந்த அறிக்கையின் அடிப்படையில், உரிய விதிகளை பின்பற்றி யானையை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.