close
முகப்புஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

ஏர்செல் மேக்சிஸ் நிதி நிறுவன  முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.  

வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்போது, வழக்கு விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யவும் தடை விதித்தார். 

முன்னதாக, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.