close
முகப்புபேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: மு.க. ஸ்டாலின்

பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: மு.க. ஸ்டாலின்

பேராசிரியை விவகாரத்தில் சி.பி.ஐ வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: மு.க. ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வீரர்  தீரன் சின்னமலையின் 262 -வது பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் தரும் வரிப்பணம் மக்களுக்கு செல்ல வேண்டும் என கூறியவர் தீரன் சின்னமலை. இளைஞர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கியவர் என தெரிவித்தார்.

மேலும் பல்கலைகழக துணை வேந்தர் தான் மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். 
ஆனால் பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடிய  கவர்னர் செய்கிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பேராசிரியை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மேற்பாற்வையில் சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிப்படும் என தெரிவித்தார்.