close
முகப்புகாதலர்களின் முக்கிய அடையாளமான ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி 

காதலர்களின் முக்கிய அடையாளமான ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி 

#loversday #feb14
February 13, 2018 342Views
காதலர்களின் முக்கிய அடையாளமான ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி 

உலகம் முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் காதலர்களின் முக்கிய அடையாளமான ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்ப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடுவது போல், இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காதலின் முக்கிய அடையாளங்களாக கருதப்படும் ரோஜாப்பூவிற்கு பல்வேறு இடங்களில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. 

தென் மாவட்டங்களில் பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், இன்று ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளது. இதற்காக பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜாப்பூக்கள் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. 

இந்நிலையில், குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் ரோஜா பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனாற் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.