close
முகப்புபல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே இன்று திறக்கப்பட உள்ளது ஜெயலலிதா உருவப்படம்

பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே இன்று திறக்கப்பட உள்ளது ஜெயலலிதா உருவப்படம்

February 12, 2018 212Views
பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே இன்று திறக்கப்பட உள்ளது ஜெயலலிதா உருவப்படம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்ப்டும் என ஏற்கனவே அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, பிரதமர் மோடியை விழாவிற்கு அழைத்த நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில், இன்று உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் , முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.