close
முகப்புஉப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உப்பளத் தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தைப் போல் நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிப்படி மழை காலங்களிலும், வேலையில்லாத நாட்களிலும் நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.