close
முகப்புதேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்ய நேரம் கேட்கும் கமல்.!

தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்ய நேரம் கேட்கும் கமல்.!

தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்ய நேரம் கேட்கும் கமல்.!

நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள் நேரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

தமிழகத்தின் முன்னனி நடிகர்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், வரும் 21-ந்தேதி ராமேசுவரத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். 

இதனிடையே, தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக, தனது கட்சியை பதிவு செய்வதற்காக,  நாளை மறுநாள் 15-ந்தேதி  தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது. அன்றைய தினம்,  தனது  கட்சியின் பெயரை நடிகர் கமல் பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.