close
முகப்புஇன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  

இன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  

February 02, 2018 300Views
இன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  

உள்ளாட்சித் தேர்தல், கட்சி நிர்வாகிகளை புதியதாக நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

உள்ளாட்சித் தேர்தல், கட்சி நிர்வாகிகளை புதியதாக நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக  ஆலோசனை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

இக்கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளதை அடுத்து, இது குறித்து  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதில் புதிய மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

மேலும், அதிமுக அளவில் புதிய மாவட்டங்களைப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.