close
முகப்புஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்கு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்கு

February 03, 2018 427Views
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்கு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு 217 ரன்களை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்தில் 12வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரை இறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

இந்நிலையில், இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 216 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அந்த அணியின் அதிகபட்சமாக ஜோனதன் மெர்லோ 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.