close
முகப்புஉன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

உன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

உன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

உன்னாவ் கொலை வழக்கில், சசி சிங் மற்றும் பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆகிய இருவரும் 4 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய உதவியாளர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக சிறுமி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பாதிக்கப்பட சிறுமியின் தந்தையை வேறொரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்தார்.

 இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச அரசு நீதி விசாரணைக்கு  உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல்சிங் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட அந்த வழக்கில், தற்போது மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சசி சிங்கின் மகன் சுபன் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சசி சிங் மற்றும் பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆகிய இருவரும் 4 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.