close
முகப்புசிரியாவில் சோதனை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

சிரியாவில் சோதனை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

சிரியாவில் சோதனை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

சிரியாவில் இரசாயண தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும்  சிரியாவில், கிழக்கு கூட்டா பிராந்தியத்தில் உள்ள டௌமா பகுதியில் கடந்த 7ம் தேதி  கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 85ற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

இதையடுத்து அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு, டௌமா பகுதியில் இரசாயண தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே 70றக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இரசாயணத்தால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில், இரசாயண தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் டௌமா பகுதியில் சோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.