close
முகப்புசிரியாவில் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை காலை டமாஸ்கஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுப் படைகளுக்கும் இடையே வன்முறை நிகழ்ந்து வருகின்றது. அங்கு அரசுப் படையினர் ரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் சிரியா மீது, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் கூட்டுப் படைகளுடன் இணைந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். சிரியாவின் அசாத் பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்றால் வான்வெளி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்த நிலையில், இன்று காலை டமாஸ்கஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சிரியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் இருக்கும் பர்சாவிலும், டமாஸ்கஸிலும் தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆறு முறை பலத்த சத்தத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.