close
முகப்புஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை

ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை

ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுதலை

ஹைதராபாத் மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதில் நிகழ்ந்த பயங்கர வெடி குண்டு தாக்குலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து, சந்தேகத்திற்குரிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று விடுவிக்கப்பட்டனர். 

குற்றம்சாட்டவர்கள் மீது உரிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாததால், வழக்கில் கைது  செய்யப்பட்ட தேவேந்தர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசிமாநந்தா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.