close
முகப்புகத்துவா பாலியல் வன்கொடுமை: வழங்கறிஞர் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

கத்துவா பாலியல் வன்கொடுமை: வழங்கறிஞர் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

கத்துவா பாலியல் வன்கொடுமை: வழங்கறிஞர் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி 6 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 போலீசார், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு கத்துவா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவத், தான் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்படலாம் என அச்சம் தெரிவித்ததால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தந்தை உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் சிறார் குற்றவாளியின் வீட்டிற்கும் உரிய பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.