close
முகப்புகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

11வது ஐ.பி.எல் தொடரின் 13வது போட்டியில் கொல்கத்தா ஈடென் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான, நைட்ரைடர்ஸ் அணியும், கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த உத்தப்பா அதிரடியாக விளையாடி 35ரன்கள் எடுத்து நதீமிடம் வீழ்ந்தார். நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்கவீரர் க்றிஸ் லினும் 31ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு, களம்புகுந்த நிதிஸ் ரானாவும், 5வது வீரராக களமிறங்கிய ஆண்ட்ரே ரசெலும், டெல்லி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இறுதியில், அந்த அணி 20ஓவர்கள் முடிவில் 9விக்கெட்டுக்களை இழந்து 200ரன்கள் குவித்தது. அதிபட்சமாக, நிதிஸ் ரானா 59ரன்களும், ஆண்ட்ரே ரசெல் 12 பந்தில் 41ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணியில், தொடக்க வரிசை வீரர்களான கேப்டன் கம்பீர், ஜேசன் ராய், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினர். பின்னர் வந்த ரிஷப் பந்த், க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. ஆனால், ரிஷப் பந்த் 43ரன்களும்,  க்ளென் மேக்ஸ்வெல் 47ரன்களும் எடுத்திருந்த போது, குல்தீப் யாதவ் சுழலில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 14.2ஓவர்களில் 129ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் அந்த அணி இழந்தது. இதன்மூலம்,  71ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 59ரன்கள் எடுத்த கொல்கத்தா வீரர் நிதிஸ் ரானாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.