close
முகப்புமோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் !

மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் !

April 17, 2018 188Views
மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் !

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை தெரிவிக்க தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில்,  தமிழ்நாட்டின் உணர்வுகளை தங்களிடம் நேரடியாக தெரிவிக்கவும், காவிரி நதி நீர் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்பதற்காகவும் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாக மாநில அரசு எங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் நிதித்துறை மத்திய இணை அமைச்சரோ பிரதமரை அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திக்க முதலமைச்சரிடம் இருந்து கடிதம் வந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.  

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனு,  அநீதியானது என்று இதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய கொந்தளிப்பிற்கு உள்ளனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, அனைத்து கட்சி தலைவர்களும் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.