close
முகப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது 

February 13, 2018 423Views
 ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய கிராம மக்கள் கைது 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வலியுறுத்தி குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் விடியவிடிய தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும்  புகையால் காற்று மாசுபாடு, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலையில் ஆலையின் இரண்டாவது பிரிவு தொடங்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை முழுவதாக மூட வலியுறுத்தியும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். தகவலறிந்து வந்த தூத்துக்குடி சார்ஆட்சியர், மாவட்ட காவல் கூடுதல்  கண்காணிப்பாளர், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது