சரியான நேரத்திற்கு பணிக்கு வராத தலைமை செயலக ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
காலத்தோடு பணிக்கு வராத ஊழியர்களின் மீது சம்பளம் பிடித்தம் போன்ற நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமை செயலகத்தில் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
துறை கண்காணிப்பாளரே நேரத்தோடு வருகை புரியவில்லை என்றபோது, தலைமை செயலகத்திலே இந்த நிலை என்றால் மற்ற அலுவலகங்களில் எப்படி ஊழியர்கள் நேரத்தோடு வருவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.