close
முகப்புவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீகிதத்தில் மாற்றமின்றி 6 சதவீதமாக தொடரும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டிற்கான முதலாவது நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம்,   ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் சிங் பட்டேல் தலைமையில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரலாமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 5 பேர் மாற்ற வேண்டாம் என வாக்களித்த நிலையில், பழையப்படியே வட்டிவிகதம் 6 சதவீதமாக தொடரும் எனவும், அதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும் எந்தவித மாற்றமும் இன்றி 5.75 சதவீதமாக  தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.