close
முகப்புசத்தியமா சொல்றேன் நான் ரவுடி இல்ல, சுகர்பேசன்ட்: ரவுடி பினு கதறல்

சத்தியமா சொல்றேன் நான் ரவுடி இல்ல, சுகர்பேசன்ட்: ரவுடி பினு கதறல்

February 13, 2018 271Views
சத்தியமா சொல்றேன் நான் ரவுடி இல்ல, சுகர்பேசன்ட்: ரவுடி பினு கதறல்

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி பினு இன்று தானாக முன்வந்து அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். 

ரவுடி பினு போலீசாரிடம் சரணடைந்த நிலையில் அவரின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பேசிய ரவுடி பினு, நீங்க நினைக்கும் அளவிற்கு நான் பெரிய ரவுடி எல்லாம் இல்லை. எனக்கு வயது 50, நான் ஒரு சுகர் பேசன்ட்.  தம்பி அழைத்ததால் தான் 3 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்தேன். 

பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த போது தான் போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். தான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நான் எங்கு சென்றாலும் போலீசார் என்னை தேடி வந்தனர். அதனால் தான் போலீசாரிடம் சரணடைந்ததாக அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளான்.