close
முகப்புஆந்திரா முழு அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்தில் சிக்கல்

ஆந்திரா முழு அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்தில் சிக்கல்

ஆந்திரா முழு அடைப்பு போராட்டத்தால் போக்குவரத்தில் சிக்கல்

ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. காட்பாடியில் சாலைகள் வெறிச்சோடியுள்ளது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முழு அடைப்பு போராட்டத்தால் வேலூரில் இருந்து சித்தூர்,திருப்பதி, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. 

அதேநேரம், இங்கிருந்து சரக்கு லாரிகள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் மட்டும் செல்கின்றன. ஆந்திராவில் முழு கடை அடைப்பு காரணமாக காட்பாடி வழியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு பேருந்துகள் இயக்கப்பாடாதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும்  அவதிக்கு ஆளாகியுள்ளனர்.