close
முகப்புரஜினியை சீண்டினால்....தமிழிசை ஆவேசம் 

ரஜினியை சீண்டினால்....தமிழிசை ஆவேசம் 

April 17, 2018 282Views
ரஜினியை சீண்டினால்....தமிழிசை ஆவேசம் 

பாரதிராஜா ரஜினிகாந்தை "கர்நாடக காவியின் தூதுவர்" என கூறுவது வேண்டுமென்றே எங்களை சீண்டுவதற்கு சமம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

  • காவிரி பிரச்சனை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. சகோதரர் ரஜினிகாந்தை "கர்நாடக காவியின் தூதுவர்" என  கூறுவது எங்களை இழுப்பதற்கு வேண்டுமென்றே சீண்டுவதற்கு சமம்.
  • சீமான், பாரதிராஜா ஆகியோர் அந்நிய சக்திகளின் தூதுவர்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். 
  • பிரிவினை வாதம் குறித்து பேச தமிழக மக்களிடம் ஆதரவு கிடையாது.  
  • ராணுவ கண்காட்சிக்கு 3 லட்சம் பேர் வந்து பார்வையிட்டுள்ளனர். தமிழக இளைஞர்கள் பாஜக பக்கம் உள்ளனர். நரேந்திர மோடியின் பக்கம் உள்ளனர். 
  • எங்கள் கருத்துக்கள் பிரித்தாளும் கருத்துக்கள் இல்லை. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கர்நாடக தமிழக விவசாயிகளுக்கு பாதிப்படையாமல் காவிரி பிரச்சனை தீர்க்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளார். 
  • ஆளுநர் செய்வதெல்லாம் தவறு என கூறும் ஸ்டாலின் அவரை சென்று சந்திக்கின்றார். அவர் செய்வது தவறு என்றால் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏன் அவரை சென்று பார்க்கின்றனர். ஏன் அவரை குறை கூறுகின்றனர். 
  • எந்த விதத்திலும் தமிழகம் பாதிப்படையாது. எதுவுமே தமிழகத்தில் சரியாக நடந்து விடக்கூடாது என்பதே ஸ்டாலின் கருத்தாக உள்ளது. என தெரிவித்தார்