close
முகப்புநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை சந்தித்த துணைவேந்தர் செல்லத்துரை 

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை சந்தித்த துணைவேந்தர் செல்லத்துரை 

April 17, 2018 229Views
நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை சந்தித்த துணைவேந்தர் செல்லத்துரை 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்தார். 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. 

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.